search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் ----நடந்தது.
    X
    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் ----நடந்தது.

    மாவட்டக் கல்வி அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம்

    திருவாரூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
    திருவாரூர்:

    வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து ஆயுள் காப்பீட்டுத் தவணைத் தொகையை பிடித்தம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் பாலசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் தயா சௌந்தர், மாவட்டத் துணைச் செயலாளர் நிர்மல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஈவேரா கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் ஜூலியஸ், மாவட்டத் தலைவர் முருகேசன், மாவட்டப் பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ண மூர்த்தி, ஐயப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, அமிர்தராஜ், ஜெயசீலன் உள்ளிட்ட மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
     
    உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் களுக்கு ஆயுள் காப்பீடு தவணைத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரும் நிலையில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களது ஊதியத்திலிருந்து ஆயுள் காப்பீடு தவணைத் தொகையை பிடித்தம் செய்ய மறுப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    ஆசிரியர்களை அரசுக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கல்வித் துறை அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது. உடனடியாக ஆசிரியர்கள் ஊதியத்திலிருந்து பிரீமியத் தொகை பிடித்தம் செய்ய வேண்டும்

     இல்லையேல், திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
    மேலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண் ஆசிரியர்களுக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

     முன்னதாக வட்டாரச் செயலாளர் சரவணகுமார் வரவேற்றார். இறுதியில் வட்டார பொருளாளர் ராஜாராமன் நன்றி கூறினார்.
    Next Story
    ×