search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை படத்தில் காணலாம்.
    X
    உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை படத்தில் காணலாம்.

    நெல்லை அருகே நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

    நெல்லை கங்கைகொண்டானில் நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
    கயத்தாறு:

    நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பஞ்சாயத்தை சேர்ந்த சுற்று வட்டார விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் கங்கை கொண்டானில் இன்று  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

    போராட்டத்திற்கு ஊர் தலைவரும், விவசாயியுமான செல்வராஜ் தலைமை தாங்கினார். போராட்டம் குறித்து விவசாயிகள்  கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.   பயிரிடுவதற்கு   நகை அடகு வைத்து வங்கிகளில் கடன் பெற்று விவசாயம் செய்து 100 நாட்களுக்குப் பின்பு இந்த பலனை அடையும் நேரத்தில் இந்த நெற்களை அரசு கொள் முதல் செய்ய வரவில்லை.

    இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனுக்கள் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் தகவல் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    இப்பகுதியில் நெல் குவிண்டாலுக்கு ரூ.1,300-க்கு போகிறது. ஆனால் எங்களிடம் அரசு விலை நிர்ணயித்த விலையை விட குறைவாக கேட்கிறார்கள். எனவே எங்களுக்கு பயிர் களின் பலன் கிடைக்க வில்லை.
     
    இந்த விற்பனை செய்தால் நாங்கள் வாங்கிய வங்கி கடனுக்கு சரியாகி விடும். அதனால் வாழ்வாதாரம் எங்களுக்கு பாதிக்கப்படு கிறது.   

    அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வலி யுறுத்தி நாங்கள் உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளோம்.  

    அரசு அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று கூறினால் உடனடியாக போராட்டத்தை கைவிடு வோம். இல்லை என்றால் போராட்டம் தொடரும் என்றனர்.

    இந்நிலையில் போராட் டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் தாழையூத்து டி.எஸ்.பி. ஜெயராஜ், இன்ஸ் பெக்டர் பெருமாள் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர் முத்து லட்சுமி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் மாலைக்குள் விவசாயிகளின் கோரிக்கை களுக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து போராட் டம் முடிவுக்கு வந்தது. பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
    Next Story
    ×