என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பிளஸ்-1 மாணவர்களுக்கு ஏப்ரல் 5ந்தேதி முதல் திருப்புதல் தேர்வு
Byமாலை மலர்8 March 2022 11:01 AM GMT (Updated: 8 March 2022 11:01 AM GMT)
மாணவர்கள் எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்து தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் மூலம் அறிவுரை வழங்கப்படும்.
திருப்பூர்:
கடந்த ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர் அனைவரும் ‘ஆல்பாஸ்’ செய்யப்பட்டனர். மாவட்டத்தில் நடப்பாண்டு 13 ஆயிரத்து 97 மாணவர், 14 ஆயிரத்து, 920 மாணவிகள் என மொத்தம் 28 ஆயிரத்து 017பேர் பிளஸ்-1 தேர்வு எழுத உள்ளனர்.
இவர்களுக்கு இதுவரை தேர்வுகள் நடக்காத நிலையில், ஏப்ரல் 5-ந்தேதி முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவருக்கு பொதுத்தேர்வு அட்டவணை அறிவிக்கும் முன் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு வந்தது.
பிளஸ்-1 மாணவருக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்து தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் மூலம் அறிவுரை வழங்கப்படும் என்றனர்.
Next Story
×