search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை குட்டைத்திடலில் குவிந்து கிடக்கும் பறிமுதல் வாகனங்கள்

    குட்டைத்திடல், குழந்தைகள் விளையாட்டு மைதானமாகவும் மாரியம்மன் தேர்த்திருவிழாவின் போது, பொழுது போக்கு அம்சங்கள், கடைகள் அமைக்கும் மையமாகவும் பல ஆண்டுகளாக உள்ளது.
    உடுமலை:

    உடுமலை போலீசாரால் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கடத்தல், போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க அந்த வாகனங்கள் வெளியேற்றப்பட்டு குட்டைத்திடலில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் உரிய பாதுகாப்பு இல்லாமல் வீணாகி வருகிறது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் துருப்பிடித்தும், உடைந்தும் பழைய இரும்பு குடோனாக மாறியுள்ளது.

    குட்டைத்திடல், குழந்தைகள் விளையாட்டு மைதானமாகவும் மாரியம்மன் தேர்த்திருவிழாவின் போது, பொழுது போக்கு அம்சங்கள், கடைகள் அமைக்கும் மையமாகவும் பல ஆண்டுகளாக உள்ளது. அம்மன் வேடுபறி நிகழ்ச்சி, மேடை ஆகியவை அமைக்கப்படும். தேர்த்திருவிழா நடக்க உள்ள நிலையில் வழித்தடத்தை மறித்து பெருமளவு நிலத்தை ஆக்கிரமித்தும் வாகனங்கள் உள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    வழக்கமாக போலீஸ் வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு அவ்வப்போது போலீசாரால் பொது ஏலத்தில் விடப்படும். இதன் வாயிலாக அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

    ஆனால் உடுமலை போலீஸ் நிலையம் குட்டைத்திடலில் ஆண்டுக்கணக்கில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, கார், பைக் ஆகியவை பாதுகாக்கப்படாததால் பழைய இரும்புக்கு கூட லாயக்கற்றதாக மாறியுள்ளது.

    இந்த வாகனங்களை முறையாக பாதுகாக்கவும், குட்டைத்திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக கொண்டு வரவும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
    Next Story
    ×