search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிப்பிக்காளான் வளர்ப்பு முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்ட போது எடுத்தப்படம்.
    X
    சிப்பிக்காளான் வளர்ப்பு முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்ட போது எடுத்தப்படம்.

    சிப்பிக்காளான் வளர்ப்பு முறை குறித்து செயல் விளக்கம்

    சங்கரன்கோவில் வட்டாரத்தில் சிப்பிக்காளான் வளர்ப்பு முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
    சங்கரன்கோவில்:

    கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களை பெற்று வருகின்றனர்.

     இந்த பயிர்ச்சியின் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் பெரும்பத்தூர் கிராம விவசாயிகளிடம் சிப்பிக் காளான் வளர்ப்பு முறை பற்றி செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். 

    அதில் வைக்கோல் பதப்படுத்தும் முறை, காளான் படுக்கை அமைத்தல், படுக்கை பராமரித்தல், காளான் அறுவடை குறித்து மாணவிகள் விகாசினி, வீரலெட்சுமி, யோக பரமேஸ்வரி, கீர்த்திமதி செயல் விளக்கம் அளித்தனர். 

    மேலும் காளான் வளர்ப்பின் நன்மைகள், அதிக லாபம் ஈட்டுதல், காளானின் மருத்துவ குணங்கள் குறித்து மாணவிகள் ர.கீர்த்தனா, ராஜதிவ்யா, நா. கீர்த்தனா, பிரியதர்ஷினி விவரித்தனர். 

    இவை அனைத்தும் வேளாண்மை விரிவாக்க துணை இயக்கம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.
    Next Story
    ×