search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநங்கை சாயிஷாவுக்கு கல்வி உதவித்தொகையை சேர்மன் சவரிமுத்து வழங்கினார்.
    X
    திருநங்கை சாயிஷாவுக்கு கல்வி உதவித்தொகையை சேர்மன் சவரிமுத்து வழங்கினார்.

    திருநங்கைக்கு கல்வி உதவித்தொகை

    தஞ்சை மதர்தெரசா பவுண்டேசன் சார்பில் திருநங்கைக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மதர்தெரசா பவுண்டேசன் கடந்த 20 ஆண்டுகாலமாக பல்வேறு நலத்திட்டப்பணிகளை சமூகத்தில் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. கொரானா பெருந்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    கொரோனா பெருந்தொற்றினால் முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்த திருநங்கையர் சமூகத்தினருக்கு மதர் தெரசா பவுண்டேசன் உதவி வருகிறது. அவர்களை உற்சாகமூட்டும் வகையில் புத்தொளி முகாம் மதர் தெரசா பவுண்டேசனில் நடைபெற்றது.
     
    இந்நிகழ்ச்சியில் மதர்தெரசா பவுண்டேசன் சேர்மன் சவரிமுத்து சமூகத்தினால் திருநங்கைகளுக்கு ஏற்படும் இன்னல்கள் மற்றும் சவால்களை துணிவுடன் எதிர்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
    இந்நிகழ்ச்சியில் திருச்சியில் உள்ள வெக்காளியம்மன் கல்வியல் கல்லூரியில் பயிலும் திருநங்கை சாயிஷாவிற்கு  முதலாமாண்டு கல்வி உதவித்தொகை ரூ.30,000 வழங்கப்பட்டது. பவுண்டேசனால் கல்வி உதவி தொகை வழங்கப்படும் முதல் திருநங்கை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் சம்பத் ராகவன் வாழ்த்துரை வழங்கினார். அறங்காவலர்கள் கோவிந்தராஜ், முரளிகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். ஏற்பாடுகளை நிர்வாக மேலாளர் மெர்சி, திட்ட இயக்குநர் ரத்தீஸ்குமார், தளவாடமேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் ராணி, விஜி, வினோதினி மற்றும் கிறிஸ்டியா ஆகியோர் செய்திருந்தனர். 

    Next Story
    ×