search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி உதவி தொகை"

    • பழங்குடியின மாணவர்கள் புகார்
    • கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவி தொகை பெற ஆன்லைனில் புதிய சாதிச்சான்றிதழ் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் பழங்குடி மாணவ மாணவிகளுக்கு கோட்டாட்சியர் மூலமாக வழங்கப்பட்ட நிரந்தர சாதிச்சான்றிதழை பதிவேற்றம் செய்ய வழிவகை செய்திட வேண்டும், மேலும் புதிய சாதிச்சான்றிதழ் பெற பல நடைமுறை சிக்கல்களான கால தாமதம், மற்றும் கோட்டாட்சியர் மூலமாக விசாரணை தாமதம் ஆகியவற்றை களைய காலநீட்டிப்பு ஆகியவை வழங்கிட வேண்டும் என கோரிக்கை அடங்கிய மனுவினை வந்தவாசி தாசில்தார் முருகானந்தத்திடம் வழங்கினர்.

    இது குறித்து தாசில்தாரிடம் கேட்டதற்கு உடனடியாக கல்லூரியிலேயே மாணவ மாணவிகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கிட ஆன்லைன் முகாம் அமைத்து தர கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    திண்டுக்கல்:

    தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர் புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

    11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற

    திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 30.09.2022 வரையிலும், பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு 31.10.2022 வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும். புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ, மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவியருக்கான வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கிட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்த பட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    2022-23 ம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவியருக்கான வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கிட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான ஓர் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக 1-ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ.1000, 6-ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.3000, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.4000, தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.4000, இளங்கலை பட்ட படிப்பிற்கு ரூ.6000, முதுகலை பட்ட படிப்பு மற்றும் தொழில் படிப்பிற்கு ரூ.7000 வழங்கப்படுகிறது.

    மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு 9 முதல் 12ம் வகுப்பு, தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.3000 மற்றும் இளங்கலை பட்டபடிப்பு மாணவர்களுக்கு ரூ.5000 மற்றும் முதுகலை பட்டபடிப்பு மாணவர்களுக்கு ரூ.6000 வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    2022-23 ம் நிதியாண்டு கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவியர்கள் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றுள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்த பட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    மாணவ மாணவியர் பிறத்துறைகளில் கல்வி உதவித்தொகை பெற வில்லை என தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் சான்றிதழ், மாணவ, மாணவியர்களின் வங்கி கணக்கு புத்தக நகல், முகம் மட்டும் தெரியும்படியான தற்போதய புகைப்படம் ஆகியவற்றுடன் உரிய விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண் 17, தரைத்தளம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×