என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்
  X
  சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்

  வடமதுரை அருகே 4 வழிச்சாலையில் கிராம மக்கள் திடீர் மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வடமதுரை அருகே 4 வழிச்சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
  வடமதுரை:

  திண்டுக்கல் & திருச்சி 4 வழிச்சாலையில் வடமதுரை அருகே வேல்வார்கோட்டை பிரிவு பகுதியில் தனியார் மில் உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

  நேற்று இரவு பணி நேரம் முடிந்து பெண் தொழிலாளர்கள் வீடு திரும்ப முயன்றனர். ஆனால் மில் நிர்வாகத்தினர் அவர்களை கூடுதலாக வேலை செய்ய வற்புறுத்தியுள்ளனர். இரவு வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் உறவினர்கள் செல்போன் மூலம் அழைத்தனர்.

  அப்போது பெண்கள் தங்களை கூடுதல் நேரம் பணி செய்ய வற்புறுத் துவதாக கூறியுள்ளனர்.

  இதனால் ஆத்திரம டைந்த கிராம மக்கள் நள்ளிரவில் மில் முன்பு ஒன்றுதிரண்டனர். திடீரென 4 வழிச்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  Next Story
  ×