search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெற்றி
    X
    வெற்றி

    33 இடங்களில் 2ல் மட்டும் வெற்றிபெற்ற அ.தி.மு.க.

    ராமநாதபுரம் நகராட்சியில் 33 இடங்களில் 2ல் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி தேர்தலில் 7, 29 ஆகிய வார்டுகளில் அ.தி.மு.க.வினர் வாபஸ், மனு தள்ளுபடியால் தி.மு.க.வினர் போட்டியின்றி தேர்வாகினர். மீதமுள்ள 31 வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் களமிறங்கினர். 

    அ.தி.மு.க. நிர்வாகிகளை சமுதாய ரீதியாக அழைத்துபேசி தி.மு.க.வினர் ஓட்டுகளை பெற முயன்றனர். இதனால் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக  நகர செயலாளர், பேரவை நிர்வாகி ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து  நீக்கப்பட்டனர்.

    இதனால் சில வேட்பாளர்களை தவிர மற்றவர்கள் பிரசாரத்தில் ஆர்வம் காட்டவில்லை. ஓட்டு எண்ணிக்கையில் வார்டு 1, 27&ல் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 3 வார்டுகளில் வென்றுள்ளனர். 

    4, 8, 10, 16, 17 ஆகிய வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள்  3வது இடத்துக்கும், 26, 32, 12 ஆகிய வார்டுகளில் 4வது இடத்துக்கும் தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×