search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்களை படத்தில் காணலாம்
    X
    திண்டுக்கல்லில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்களை படத்தில் காணலாம்

    திண்டுக்கல்லில் உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

    திண்டுக்கல்லில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில்  1 மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளுக்கு தேர்தல் இன்று நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 3 நகராட்சிகளுக்குட்பட்ட மொத்தம் 75 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 23 பேரூராட் சிகளுக்கு உட்பட்ட மொத்தம் 363 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தம் 486 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 747 வாக்குச்சாவடிகள் உறுதி செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் வார்டு 8, 11, பேரூராட்சிகளில் நிலக்கோட்டை 2, 13, கன்னிவாடியில் வார்டு 13, கீரனூர் 15, எரியோடு வார்டு 4, சித்தையன் கோட்டை வார்டு 12, என மொத்தம் 8 பேர் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதனைத் தொடர்ந்து 737 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, திண்டுக்கல் மாநகராட்சியில் 183, கொடைக்கானல் நகராட் சியில் 38, ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 31, பழனி நகராட்சியில் 71, மாவட்டத்தில் மொத்தமுள்ள 23 பேரூராட்சிகளில் 414 என 737 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். வாக்காளர்களுக்கு கையுறை, முக கவசம் வழங்கப்பட்டதுடன் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலுடன் வாக் களிக்க தன்னார்வலர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் காலையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு நேரம் செல்ல செல்ல அதிகரிக்கத் தொடங்கியது.

    வாக்குச்சாவடி மையங்களில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். வாக்காளர்களை தங்கள் சொந்த வாகனத்தில் அழைத்து வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    வாக்குச்சாவடி மையங் களுக்குள் வெளியாட்கள் நுழைவதை தடுக்க சி.சி.டி.வி. காமிரா மூலம் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    திண்டுக்கல் 10&வது வார்டு செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் அமைக்கப் பட்டிருந்த ஆண்களுக்கான வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய உடனே மின்னணு எந்திரம் பழுதானது. இதனைத் தொடர்ந்து அதற்கு மாற்றாக வேறு எந்திரம் வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவுக்கு தாமதம் ஏற்பட்டது.

    திண்டுக்கல் மாநகராட்சி 16&வது வார்டு 48&வது வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் ஏஜெண்டாக அ.தி.மு.க. வை சேர்ந்தவர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். இதனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    9&வது வார்டு பகுதியில் தி.மு.க. வேட்பாளர் சாந்தியின் கணவர் பெருமாள்சாமிக்கும், அ.தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரியின் கணவர் ஆண்டிக்கும் இடையே வாக்குச்சாவடி முன்பு மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நத்தம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 24 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டது. காலை 7 மணிமுதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

    அ.தி.மு.க. சேர்மன் வேட்பாளர் சிவலிங்கம், கொண்டையம்பட்டி அரசு பள்ளியில் வாக்களித்தார்.  தி.மு.க. சேர்மன் வேட்பாளர் சேக்சிக்கந்தர் பாஷா சி.எஸ்.ஐ. பள்ளியில் வாக்களித்தார். அனைத்து வாக்குச் சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    Next Story
    ×