search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேசிய போது எடுத்த படம்.
    X
    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேசிய போது எடுத்த படம்.

    எஸ்.பி. தலைமையில் தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

    ஆறுமுகநேரியில் தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
    ஆறுமுகநேரி:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளான வருகிற 19-ந் தேதி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்தான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது, தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய நகராட்சிகள், ஆறுமுகநேரி, ஆத்தூர், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஏரல், நாசரேத், சாயர்புரம், பெருங்குளம் உள்ளிட்ட 17 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவின் போது போலீசார் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

    தூத்துக்குடி கூடுதல் சூப்பிரண்டு கோபி, திருச்செந்தூர் உதவி சூப்பிரண்டு ஹர்சிங், துணை சூப்பிரண்டுகள் ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், சாத்தான்குளம் ராஜு, ஆயுதப்படை கண்ணபிரான், மாவட்ட குற்றப்பிரிவு ஜெயராம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பாலாஜி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்&இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×