search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அடுத்தக்கட்ட போராட்டம் - பல்லடத்தில் விசைத்தறியாளர்கள் ஆலோசனை

    அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து இன்று மாலை பல்லடத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
    பல்லடம்:

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில் விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு கேட்டு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால் விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருப்பூர் கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:

    ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வை அமல்படுத்தாமல் உள்ளனர். இதனால் ஜவுளி உற்பத்தியாளர்களின் மெத்தனப் போக்கைக் கண்டித்து இரண்டு மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க கூட்டமைப்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி கடந்த ஜனவரி 9-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இன்றுடன் 31 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது வரை சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் இதுவரை சுமார் ரூ.3,100 கோடி மதிப்பிலான காடா துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

    இதனால் திருப்பூர்,கோவை மாவட்டங்களின் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூலி உயர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து இன்று மாலை பல்லடத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×