என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மழை பெய்ததால் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகளை படத்தில் காணலாம்.
  X
  மழை பெய்ததால் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகளை படத்தில் காணலாம்.

  செஞ்சியில் திடீர் மழை- 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல் மூட்டைகள் என சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

  செஞ்சி:

  விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் உள்ளது. குடியரசு தினத்தையொட்டி செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு விடுமுறை விடப்பட்டது.

  எனவே நேற்று கூடுதலாக நெல் மூட்டைகள் வந்திருந்தன. அவைகளில் கொள்முதல் செய்யப்பட்டது போக மீதமிருந்த மூடைகள், நேற்று இரவு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்த ஆக மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் விற்பனை கூடத்தில் இருந்தன.

  இன்று காலை திடீரென மழை பெய்தது. இதனால் விற்பனை கூடத்தில் இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. உடனடியாக நெல் மூட்டைகளை கொண்டு வந்த விவசாயிகள் விற்பனை கூடத்தில் கொடுக்கப்பட்ட தார்பாய் போட்டு தங்கள் நெல் மூட்டைகளை மூடினார்கள்.

  என்றாலும் லாரியில் ஏற்றுவதற்காக வைத்திருந்த நெல் மூட்டைகள் என சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. ஒவ்வொரு முறையும் மழை வரும்போது இவ்வாறு விவசாயிகள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×