search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பாபிஷேக விழாவில் திருக்குட புறப்பாடு
    X
    கும்பாபிஷேக விழாவில் திருக்குட புறப்பாடு

    புகழ் துணை நாயனார் கோவில் கும்பாபிஷேகம்

    அழகாபுத்தூர் புகழ் துணை நாயனார் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    பட்டீஸ்வரம்:

    கும்பகோணம் அடுத்துள்ள அழகாபுத்தூரில் உள்ள சவுந்திரநாயகி சமேத சொர்ணபுரீஸ்வரர் (படிக்காசுநாதர்) கோவிலில் சுவாமிக்கு திருதொண்டு புரிந்து வந்த ஆதி சைவரான புகழ்த்துணை நாயனார் மற்றும் அவரது துணைவியார் லட்சுமி அம்மையார் ஆகிய இருவருக்கும் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை மற்றும் புகழ் துணை நாயனார் வழிபாட்டு மன்றம் சார்பில் புதியதாக கட்டப்பட்ட நூதன கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

    புகழ்த்துணை நாயனாருக்கும் இவரின் துணைவியாருக்கும் இத்தலத்தின் வாயில் அருகில் தனி கோவில் அமைத்து அதற்கு நேற்று மாலை சூரியனார்கோவில் 28-வது குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், புதுக்கோட்டை திலகவதியார் ஆதீனம், தயானந்த சந்திரசேகர சுவாமிகள், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் திருவடிக்குடில் சுவாமிகள் முன்னர் மங்கல இன்னிசை முழங்க ஆலய அர்ச்சகர் கார்த்திகேய சிவாச்சாரியார், சர்வசாதகம் திருமணஞ்சேரி.

    சிவஸ்ரீ. உமாபதி சிவாச்சாரியார், சிவஸ்ரீ பாலாஜி சிவாச்சாரியார் தலைமையில் சீர்காழி சதாசிவம் ஓதுவாமூர்த்திகளின் தேவார பண்ணுடன் அங்குரார்ப்பணம், ஆசார்ய ரக்சாபந்தனம், கும்பஸ்தாபனத்துடன் முதல் கால யாக பூஜையும், விசேட திரவியாஹுதி, பூர்ணாஹீதியும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து இன்று காலை ஆதீன மடாதிபதிகள் திருமுன்னர் கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜையில் மஹா பூர்ணாஹீதி, தீபாராதனை, கடம் புறப்பாடும் அதனை தொடர்ந்து விமான மஹா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. விழா நிறைவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    இவ்விழா ஏற்பாடுகளை அறுபத்து மூவர் திருப்பணி அறக்கட்டளை மற்றும் புகழ்த் துணை நாயனார் வழிபாட்டு மன்றத்தினர் உள்ளூர் வாசிகள் செய்திருந்தார்கள்.
    Next Story
    ×