search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மாடுகள்.
    X
    டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மாடுகள்.

    டவுன் சாலையில் சுற்றிய 14 மாடுகளை பிடித்து சென்ற போலீசார்

    டவுன் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 14 மாடுகளை போலீசார் பிடித்து சென்றனர். இது தொடர்பாக உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றிதிரிந்து வருகிறது. இதனால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

    குறிப்பாக நெல்லை எஸ்.என். ஹைரோடு, பாளை வண்ணார்பேட்டை, மார்க்கெட் பகுதிகள், சமாதானபுரம், தச்சநல்லூர், டவுன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதாலும் தரையில் படுத்திருப்பதாலும் வாகனங்களில் செல்வோர் அவ்வப்போது விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்து வண்ணம் உள்ளது. இதைத்தொடர்ந்து சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி சார்பில் பிடித்து கோசாலையில் ஒப்படைத்து வருகின்றனர். மேலும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
     
    இந்நிலையில் டவுன் பகுதியில் இன்று ஏராளமான மாடுகள் சாலை களில் சுற்றி திரிந்தது. இதனால் அங்கு போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சப்&இன்ஸ்பெக்டர் விமலன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சாலைகளில் சுற்றி திரிந்த 14 மாடுகளை போலீஸ் நிலையத்திற்கு பிடித்து சென்றனர்.

    தொடர்ந்து மாட்டின் உரிமை யாளர்கள் மீது போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்தனர்.
    தொடர்ந்து இதுபோன்று சாலைகளில் சுற்றி திரியும் மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் படும் என போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
    Next Story
    ×