search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு அண்ணா பதக்க விருதினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்
    X
    சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு அண்ணா பதக்க விருதினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்

    விழுப்புரத்தில் குடியரசு தின விழா- 69 போலீசாருக்கு அண்ணா பதக்க விருது

    விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றிய 260 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
    விழுப்புரம்:

    நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள போலீஸ் மைதானத்தில் குடியரசு தினவிழா இன்று காலை கொண்டாடப்பட்டது.
     
    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் இன்று காலை 8.20 மணிக்கு முகாம் அலுவலகத்திற்கு புறப்பட்டு விழா மேடைக்கு வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து சரியாக 8.05 மணிக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தேசியக்கொடியினை ஏற்றினர். அதன் பின்னர் வண்ண பலூன் களை வானத்தில் பறக்க விட்டார்.

    அதன்பின்னர் திறந்த வெளி ஜீப்பில் கலெக்டர் மோகன், மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் வலம் வந்து காவல் படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து சிறப்பாக பனியாற்றிய போலீசாருக்கு தமிழக அரசு சார்பில் 69 பேருக்கு அண்ணா பதக்க விருது, 26 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றிய 260 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை வேளாண்துறை சார்பில் 18 பேருக்கு ரூ.11 லட்சத்து 15 ஆயிரத்து 625 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    விழாவில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி மாவட்ட ஊராட்சி சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட சுகாதார இணை இயக்குனர் டாக்டர் சண்முக கனி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்படக் கண்காட்சியை கலெக்டர் மோகன் திறந்து வைத்தார்.
    Next Story
    ×