
திருச்செந்தூர் தாலுகா வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கும் விழா திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்தில் நடந்தது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் வரவேற்று பேசினார்.
விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 81 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 பேருக்கு உதவி தொகையும், 3 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோபால கிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலர் சங்கர நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.