என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வரைபடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வழங்கிய காடசி.
  X
  வரைபடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வழங்கிய காடசி.

  நெல்லை மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கு டிஜிட்டல் வரைபடம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை மாவட்டத்தில் தற்போது 5 உட்கோட்டங்கள் மற்றும் 34 போலீஸ் நிலையங்கள் உள்ளன. அவற்றின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அதற்கான டிஜிட்டல் வரைபடத்தை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வழங்கினார்.
  நெல்லை:

  கடந்த 2019-ம் ஆண்டு ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.

  அதன்பிறகு அங்கு புதிதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைக்கப்பட்டு போலீஸ் நிலைய எல்லைகளும் வரையறுக்கப்பட்டன.

  நெல்லை மாவட்டத்தில் தற்போது 5 உட்கோட்டங்கள் மற்றும் 34 போலீஸ் நிலையங்கள் உள்ளன. அவற்றின்  எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

  இந்த மறுசீரமைக்கப்பட்ட எல்லை தொடர்பாக டிஜிட்டல் வரைபடத்தை உருவாக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார்.

  அதன்பேரில் அனைத்து உட்கோட்டம் மற்றும் போலீஸ் நிலையங்களுக்கு  ஒரே அளவுடைய டிஜிட்டல் வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

  அதனையும், அதற்கான குறுந்தகட்டினையும் இன்று மாவட்டத்தில் உள்ள உட்கோட்டங்கள்‌ மற்றும் போலீஸ் நிலையங்களுக்கு   மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வழங்கினார்.
  Next Story
  ×