என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  பெரியபாளையம் அருகே வேனில் கடத்திய 120 கிலோ புகையிலை பறிமுதல்- 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரியபாளையம் அருகே வேனில் கடத்திய 120 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பா 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பெரியபாளையம்:

  திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் போலீஸ் இன்ஸ் பெக்டர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  பெரியபாளையம் அருகே அகரம் கண்டிகை செல்லியம்மன் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது அவ்வழியே வந்த மினி வேன் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை போலீசார் நிற்குமாறு சைகை காட்டினர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.அவர்களை போலீசார் மடக்கி பிடித்த போது போலீசாரை தரக் குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்கள். எனவே போலீசார் அவர்களை வாகனங்களுடன் காவல் நிலையம் கொண்டு வந்து சோதனை மேற்கொண்டனர்.

  அப்போது அவர்கள் வாணியன்சத்திரம், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 120 கிலோ எடை கொண்ட புகையிலை மற்றும் ஹான்ஸ் ஆகியவற்றை கடத்தி வந்ததை கண்டுபிடித்து அவற்றை போலீசார் பறிமுதல் செய் தனர்.

  இது தொடர்பாக பூச்சிஅத்திப்பேடு, லட்சுமி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காசிராஜன் (வயது42) லட்சுமிநாதபுரத்தைச் சேர்ந்த பாலு (38), தாமரைபாக்கம், பெரிய காலனியைச் சேர்ந்த விஜயகுமார் (35) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×