search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கான வேளாண் எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண
    X
    உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கான வேளாண் எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண

    தேனியில் வேளாண் எந்திரங்கள் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    தேனியில் உழவர் உற்பத்தியாளர் குழுகளுக்கான வேளாண் எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
    தேனி:

    தேனி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வணிக வளாகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கான வேளாண் எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் முடிவில் கலெக்டர் தெரிவிக்கையில், தமிழக அரசு வேளாண்மை தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நலனை காத்திடும் வகையில், வேளாண்மை மற்றும் உழவர் துறை, தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வேளாண் பெருகுடிமக்களை பயன்பெற செய்து வருகிறது.

    அதனடிப்படையில், வேளாண்மை மற்றும் உழவர் துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில், சிறு&குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற வகையில், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு, சாகுபடி செய்வதற்கு தேவையான எந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிகள் வாங்குவதற்கு தொகுப்பு நிதி வழங்கிடும் பொருட்டு கூட்டுப்பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரே கிராமத்தில் தொகுப்பாக நிலமுள்ள 20 சிறு, குறு விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு, விவசாய ஆர்வலர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இதனை போன்று அருகில் உள்ள 5 விவசாய ஆர்வலர் குழுக்களை இணைத்து, (குறைந்தபட்சம் 100 சிறு, குறு விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டு) ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கும் வேளாண்மை தொடர்பான பொது தேவைகளைப் பூர்த்தி செய்ய ரூ.5 லட்சம் மூலதன நிதியின் மூலம் இக்குழுவில் உள்ள சிறு, குறு விவசாய உறுப்பினர்கள் தங்களின் தேவைக்கேற்றவாறு, நுண்ணீர் பாசன அமைப்பு, நீர் எடுத்து செல்லும் குழாய்கள், பொது பயன்பாட்டுக்கான டிராக்டர், பவர் டில்லர் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளுக்காக பல்வேறு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    Next Story
    ×