என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போலீசார் 8 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
  காங்கேயம்:

  காங்கேயம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணம் வைத்து சட்ட விரோதமாக சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். 

  இதனையடுத்து காங்கேயம் டி.எஸ்.பி. குமரேசன் உத்தரவின் பேரில் நடுப்பட்டி என்ற பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போதுஅங்குள்ள தென்னந்தோப்பில் 8 பேர் கொண்ட கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.  

  அவர்களை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் ( வயது 54), கதிர்வேல்(38), சபரிஷ்( 44), முருகானந்தம்( 45), பிரகாஷ்(40), விஸ்வநாதன்( 43), ராஜேஸ்வரன்(39), செந்தில்குமார்(35) என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ .2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
  Next Story
  ×