search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    X
    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல்லில் போதைப் பொருள் தடுப்பு போலீசார் சோதனை

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் சோதனை செய்தனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ரெயில்வே நிலையத்தில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார், ரெயில்வே போலீசார், மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆகியோர் ரெயில் நிலையம், ரெயில் பெட்டிகள், பிளாட்பார்ம் ஆகிய பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என தீவிர சோதனை நடத்தினர்.

    பின்னர் இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி ரெயில்வே துறையில் பணிபுரியும் அலுவலர்கள், ரெயில் நிலையத்தில் சிற்றுண்டி கடை நடத்தும் உரிமையாளர்கள் மற்றும் ரெயில் பயணிகள் ஆகியோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    இதில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் ரெயில்வே நிலையத்தில் இருந்தாலோ மற்றும் கேட்பாரின்றி சூட்கேஸ், பெட்டி ஆகியவை கிடந்தாலோ அருகில் உள்ள போலீசார் அல்லது போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி தெரிவித்தார்.
    Next Story
    ×