என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாபநாசத்தில் விரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்
Byமாலை மலர்20 Jan 2022 8:47 AM GMT (Updated: 20 Jan 2022 8:47 AM GMT)
பாபநாசத்தில் மைசூர், திருச்செந்தூர் விரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என மத்திய ரெயில்வே அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசம்:
பாபநாசம் ரெயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன், மத்திய
ரயில்வே அமைச்சகத்திற்கும், தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு
ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அதில், கடந்த 10 ஆண்டுகளாக மைசூர் விரைவு ரயில் வண்டியும்,
8 ஆண்டுகளாக நின்று சென்று சேவை அளித்து வந்த திருச்செந்தூர்
விரைவு ரெயில் வண்டியும் கொரோனா நோய் தொற்று அதிகமாக இருந்த நேரத்தில் ரயில்வே துறை பெரும்பான்மையான ரயில்வண்டிகளை ரத்து செய்தது.
பின்னர் படிப்படியாக நிலைமை சீரடைந்த பின் பல ரயில் வண்டிகளை இயக்க தொடங்கியது.
இந்த சூழ்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து பாபநாசம் ரயில் நிலையத்தில் மைசூர் மற்றும் திருச்செந்தூர் ரயில் வண்டிகளின் நிறுத்தத்தை காரணம் இல்லாமல் ரத்து செய்துவிட்டது.
தாலுகா, சட்டமன்ற தொகுதி மற்றும் ஆன்மிக திருக்கோவிலின்
மையமாக இருந்து வரும் பாபநாசம் ரயில் நிலையத்தின் மூலம்
மாதம் சுமார் 11 லட்சமும் வருடத்திற்கு சுமார் 1.50 கோடியும் டிக்கெட் வருவாயாக தென்னக ரயில்வேவிற்கு கிடைத்துவரும் போக்குவரத்து
மிகுந்த முக்கியமான ரயில் நிலையம் ஆகும்.
குறிப்பாக இரவு நேரத்தில் தென் மாவட்டதின் மதுரை, விருதுநகர்,
சாத்தூர், கோவில்பட்டி, திருச்செந்தூர் போன்ற பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் செய்யும் வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு என
உள்ள ஒரே வண்டி திருச்செந்தூர் விரைவு ரெயில் ஆகும்.
இதைபோலவே அருகில் உள்ள தொழில் நகரமான ஓசூர் மற்றும் பெங்களூரு பகுதிகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள்மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து பாபநாசம் வட்டாரத்தில் உள்ள முக்கிய கோவில்களை தரிசிக்க வரும் பயணிகள் பெரும்பாலும் மைசூர் விரைவு ரெயில் வண்டியைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
அடுத்து திருச்செந்தூர் விரைவு ரெயில் வண்டியை பொறுத்தவரை சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும்பொழுது பல இடங்களில் அட்டவணை நேரத்திற்கு முன்பாகவே சென்று விடுகிறது.
குறிப்பாக திருச்சிக்கு அரை மணி முன்னதாகவும் திருநெல்வேலியில்
ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவும் சென்று காத்திருந்துதான் செல்கிறது. திரும்பி சென்னைக்கு வரும்பொழுதும் இதே நிலைமைதான்.
இந்த சூழ்நிலையில் பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களை
பலமுறை நேரில் சந்தித்து மேற்படி விரைவு ரயில் வண்டிகள்
பாபநாசத்தில் நின்று செல்ல கேட்டு கொண்டதன் பேரில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு தென்னக ரெயில்வே உயர் அதிகாரிகளையும்,
சமீபத்தில் வந்த அகில இந்திய பயணிகள் வசதி சேவை
குழுவினரையும் சந்தித்து நிலையத்தின் வருவாய் மற்றும் முக்கியத்துவங்களை குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
பாபநாசம் ரெயில் நிலையத்தை விட மிக குறைந்த வருவாய் பெற்று
தரும் அருகில் உள்ள சிறிய ரெயில் நிலையங்களில் மேற்படி
வண்டிகள் நின்று செல்வது வியப்பாக உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் ரெயில்வே நிர்வாகத்தின் மெத்தன போக்கு பயணிகள் மற்றும் பொதுமக்களை சோர்வடைய வைத்துள்ளது வண்டிகள் நின்று செல்லாததால் தஞ்சைக்கும் குடந்தைக்கும் மாறிமாறி அலைய வைத்திருப்பதுடன் தேவையற்ற வீண் செலவு, காலவிரயம் ஏற்படுத்தி வருவதுதான் தற்போதைய சாதனை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X