search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,648-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 10 நாட்களாகவே அதிகரித்து வருகிறது.

    கடந்த 11-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.35,920-க்கு விற்கப்பட்டது. 12-ந்தேதி ரூ.36,080 ஆக உயர்ந்தது. 13-ந்தேதி ரூ.36,168 ஆகவும், 14-ந்தேதி ரூ.36,336 ஆகவும் விற்பனை ஆனது.

    15-ந்தேதி சற்று குறைந்து ரூ.36,296-க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் அதே விலை நீடித்தது.

    நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.36,320 ஆக உயர்ந்தது. நேற்று மீண்டும் அதிகரித்து ரூ.36,376-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று பவுனுக்கு ரூ.272 அதிகரித்துள்ளது. இன்று ரூ.36,648-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.34 அதிகரித்து ரூ.4,581-க்கு விற்கப்படுகிறது.

    வெள்ளி ஒரு கிராம் நேற்று ரூ.67.80-க்கும் விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ. 68.80-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.68,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×