search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டருக்கு தர்மஅடி- போக்சோ சட்டத்தில் கைது

    கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெயிண்டருக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள் அவரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    கவுண்டம்பாளையம்:

    கேரளாவை சேர்ந்தவர் சுப்பிரமணி என்ற சபரி(35). இவரது உறவினர் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார் .

    இதனால் சுப்பிரமணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். பின்னர் அங்கேயே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். சுப்பிரமணி தினமும் வேலை முடிந்ததும் நேராக உறவினர் வீட்டிற்கு செல்வார். அங்கு சிறிது நேரம் அமர்ந்து பேசி விட்டு செல்வார்.

    சம்பவத்தன்றும் சுப்பிரமணி உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு சிறிது நேரம் பேசி விட்டு உறவினரின் 4 வயது மகளை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்து சென்றார். சிறுமியின் தாயும் உறவினர் தானே நீ அவருடன் வீட்டிற்கு சென்று விட்டு வா என கூறி அனுப்பி வைத்தார். இதையடுத்து சுப்பிரமணி சிறுமியை அழைத்து கொண்டு தனது வீட்டிற்கு வந்தார்.

    மாணவிக்கு உணவு வாங்கி கொடுத்து விட்டு, தானும் சாப்பிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் சிறுமியின் அருகே சென்று, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் பயந்து போன சிறுமி அவரிடம் இருந்து தப்பித்து அழுது கொண்டே வீட்டிற்கு ஓடினார். சிறுமி அழுது கொண்டே வருவதை பார்த்ததும் அவரது தாயார் அதிர்ச்சியடைந்தார். மகளிடம் சென்று என்ன நடந்தது? என விசாரித்தார். அப்போது சிறுமி தன்னிடம் சுப்பிரமணி தவறாக நடந்து கொண்ட விவரத்தை கூறி அழுதார். இதைகேட்டதும் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தாய், மகளுடன் உறவினர் சுப்பிரமணி வீட்டிற்கு சென்றார். அங்கு சுப்பிரமணியை பிடித்து எனது மகளிடம் எப்படி தவறாக நடப்பாய் என கூறி அவரை கண்டித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்களிடம் சிறுமிக்கு நேர்ந்த துயரத்தை தாய் கூறினார். இதையடுத்து அவர்கள் அனைவரும் சேர்ந்து வாலிபரை வீட்டிற்குள் இருந்து தரதரவென ரோட்டிற்கு இழுந்து வந்து சரமாரியாக தாக்கி தர்மஅடி கொடுத்தனர்.

    பின்னர் அவரை துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். புகாரின் பேரில் போலீசார் சுப்பிரமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×