என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா
பேராவூரணி அருகே ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை அதிகாரிகள் நேரில் சென்று வழங்கினர்.
பேராவூரணி:
பேராவூரணி புதிய பஸ் நிலையம், செக்கடித்தோப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நிலமற்ற ஏழை எளிய மக்கள், தங்களுக்கு மனைப்பட்டா கேட்டு, முதலமைச்சர் குறைதீர்க்கும் முகாமில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமாரிடமும் மனு அளித்தனர். அவ்வாறு அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு,
68 பேருக்கு தலா 2 செண்ட் இடம் இலவசமாக வழங்கப்பட்டது.
காலகம் ஆவுடையார்கோவில் சாலையில், வளம்மீட்பு பூங்கா அருகே, திருவள்ளுவர்புரம் என பெயரிடப்பட்ட அந்த இடத்தை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் திறந்து வைத்தார்.
Next Story