என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சென்னை மாநகராட்சியில் இந்த வார்டுகளில் இருந்துதான் முதல் பெண் மேயர் வரப்போகிறார்
சென்னை:
நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை மேயராகப் போகும் முதல் பெண் பட்டியலினத்தவர் யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. அதில் 16 வார்டுகள் பட்டியலின பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வார்டுகள் வருமாறு:-
வார்டு எண்: 3, 16, 17, 18, 21, 22, 24, 45, 62, 72, 73, 99, 108, 117, 144, 200.
16 வார்டுகள் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வார்டுகள் விவரம் வருமாறு:-
28, 31, 46, 47, 52, 53, 59, 70, 74, 77, 85, 111, 120, 135, 159, 196.
இதுதவிர பெண்கள் பொது பிரிவினருக்கு 84 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேயரை கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். எனவே பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 32 வார்டுகளில் இருந்து வெற்றிபெறும் ஒரு பெண்தான் மேயராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் பொது வார்டிலும் பட்டியலினத்தை சேர்ந்த பிரபலமான பெண்மணிகளை நிறுத்தி வெற்றிபெற செய்தும் வரலாறு படைக்கலாம். வேட்பாளர்கள் அறிவிப்பு, கவுன்சிலர்கள் தேர்வுக்கு பிறகே அந்த ரகசியம் வெளிவரும்.
இதையும் படியுங்கள்... பிரதமருடன் மு.க.ஸ்டாலின் போனில் பேசி அலங்கார ஊர்திக்கு அனுமதிபெற வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்