என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பொங்கல் பொருட்களை வாங்கி சென்ற மக்கள் (கோப்பு படம்)
  X
  பொங்கல் பொருட்களை வாங்கி சென்ற மக்கள் (கோப்பு படம்)

  பொங்கல் பொருட்கள் வினியோகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் வினியோகம் நாளை மீண்டும் வழங்கப்படுகிறது
  தேனி:

  தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

  இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காமல் விடுபட்டவர்களுக்கு அதனை வழங்கும் விதமாக நாளை ரேசன் கடைகள் செயல்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளும் நாளை திறக்கப்படும்.

  எனவே பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காமல் விடுபட்டவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் காலை 7 மணிமுதல் அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என தேனி மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×