search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    ஓமலூர் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    ஓமலூரில் கூடிய சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆயின.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆட்டு சந்தை கூடுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடிய ஆட்டு சந்தைக்கு, சேலம் மாவட்டம் முழுக்க இருந்தும் செம்மறியாடு, வெள்ளாடு, பல்லையாடு, குறும்பாடு உள்ளிட்ட ஆடுகள் அதிகமாக அதிகமாக விற்பனைக்கு வந்திருந்தன. 

    மேலும், விவசாயிகளின் வளா்ப்பு ஆடுகள், பண்ணையில் வளா்த்த ஆடுகள் என ஆயிரக்கணக்கில் விற்பனைக்கு கொண்டுவந்து குவிக்கப்பட்டிருந்தன. இதில், பெரும்பாலும், விவசாயிகள் வளா்ப்பு ஆடுகளை வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி சென்றனா்.

    மேலும், இறைச்சி கடைகாரா்கள் பண்ணையில் வளா்க்கப்பட்ட ஆடுகளை அதிகமாக வாங்கினா். ஆடுகள் விற்பனை அதிகமாக நடைபெறதால் வியாபாரிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனா்.  இங்கு இறைச்சிக்கான ஆடுகள் பத்து கிலோ எடையில் இருந்து 25 கிலோ எடை வரை விற்பனைக்கு வந்திருந்தன. 

    ஆடுகள், ரூ. 7 ஆயிரத்து 500 முதல் ரூ. 17 ஆயிரம் வரை விற்பனையானது. காலை 6 மணிக்கு கூடிய சந்தை மதியம் 12 மணி வரை நடைபெற்றது. சுமாா் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
    Next Story
    ×