search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஊராட்சி குளங்களில் மீன்கள் வளர்க்க ஏலம் விடப்படுமா?

    உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் 77 குளங்களும், சிறு குட்டைகளும் உள்ளன.
    உடுமலை:

    பருவமழை காலங்களில் கிடைக்கும் நீரை சேமிக்கும் வகையில் குளங்கள், குட்டைகள் கிராமங்களில் அமைக்கப்பட்டன. இந்த நீர் கிராம மக்களுக்கு குடிநீருக்கும், சுற்றியுள்ள நிலங்களுக்கு பாசனத்திற்கும்  நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் காரணமாக உள்ளது.

    உடுமலை பகுதியில் உள்ள குளங்களில் முட்செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்து காணப்படுகிறது. இதை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் 77 குளங்களும், சிறு குட்டைகளும் உள்ளன. மழைக் காலத்தில் மட்டும் நீர் வரத்து கிடைக்கும், இக்குளங்களே சுற்றுப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

    நீண்ட காலமாக போதிய நீர் வரத்து இல்லாமல் குளங்கள் வறண்டிருந்தது. இந்நிலையில் கடந்த வடகிழக்கு பருவமழை சீசனில் அதிக மழைப்பொழிவு கிடைத்து பெரும்பாலான குளங்கள் நிரம்பின.

    மேலும் பாசனப்பகுதியிலுள்ள விவசாயிகள் பாசன நீரை வீணடிக்காமல் குளத்தில், தேக்கி வைக்க ஆர்வம் காட்டினர். இவ்வாறு தற்போது பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன.

    பல மாதங்களுக்கு இக்குளங்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் ஊராட்சிகளுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் மீன் வளர்க்க ஏலம் விட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    கிராமப்புற குளங்களில் மீன் வளர்ப்பதால் ஊராட்சிக்கு வருவாய் கிடைப்பதுடன் உள்ளூர் மக்களும் பயன்பெறுவார்கள்.

    உடுமலை ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில்: 

    ஒன்றிய கிராமங்களில் உள்ள 77 குளங்களில், 27 குளங்களில் மீன் வளர்க்க கடந்த ஆகஸ்டில் ஏலம் விடப்பட்டது. மீதமுள்ள குளங்களின் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    இதே போல் குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள 23 ஊராட்சிகளில் 50க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இக்குளங்களின் நீர் இருப்பு அடிப்படையில் மீன் வளர்க்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
    Next Story
    ×