search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தயார் நிலையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி
    X
    தயார் நிலையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி

    மருத்துவ கல்லூரி திறப்பு

    திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட மக்களின் நீண்ட வருட ஏக்கமாக இருந்தது அரசு மருத்துவக்கல்லூரி. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியது. திண்டுக்கல் அருகே உள்ள ஒடுக்கம் பகுதியில் ரூ.197 கோடி மதிப்பில் கட்டுமானப்பணிகள் தொடங்கியது.

    மேலும் ரூ.129 கோடி மதிப்பில் 2020ம் ஆண்டு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை கட்டுமானப் பணிகளும் தொடங்கப் பட்டன. கல்லூரி வளாகத்தில் தரை தளம் மற்றும் 6 மாடி கட்டிடங்களுடன் கூடிய கல்லூரி தரைதளம், 2 மாடிகளுடன் கூடிய நிர்வாக அலுவலகம், வங்கி, தபால் நிலையம், பொறியியல் மற்றும் மின்னியல் துறைகளுக்கான அலுவலக கட்டிடம் ஆகியவையும் கட்டப்பட்டது.

    மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு தரைதளம் மற்றும் மாணவ& மாணவிக ளுக்கான வகுப்பறை கட்டிடம், நூலகம், ஆய்வகம், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களுக்கான குடியிருப்பு கல்லூரி அலுவலர்களுக்கான குடியிருப்பு ஆகியவையும் கட்டப்பட்டுள்ளன.

    ஓர் அறையில் 3 மாணவர்கள் வீதம் 286 மாணவர்கள் மற்றும் மாணவிகள் தனித்தனியாக தங்குவதற்கான விடுதி வசதிகள் உருவாக்கப் பட்டுள்ளன. சுமார் 90 சதவீத பணிகள் நிறைவடைந்து கட்டிடங்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் முடிவடைந்துள்ளன.

    புதுப்பொழிவுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 கல்லூரிகளையும் பிரதமர் மோடி நாளை காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். ஏற்கனவே விருதுநகருக்கு வந்து மோடி கலந்து கொண்டு கல்லூரிகளை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் இருந்தபடி பிரதமர் 11 அரசு மருத்துவக்கல்லூரிகளையும் திறந்து வைக்கிறார். இந்த விழாவில் சென்னையில் இருந்தபடி தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

    திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் விஜயகுமார் மேற்கொண்டு வருகிறார்.
    Next Story
    ×