search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூரிய நமஸ்காரம்
    X
    சூரிய நமஸ்காரம்

    பொங்கல் தினமான 14-ந்தேதி தமிழகத்தில் 176 மையங்களில் சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சி

    தமிழகத்தில் அரசின் ஒத்துழைப்புடன் தினமும் இயற்கை மருத்துவ மையங்களிலும், கல்லூரிகளிலும் சூரிய நமஸ்கார பயிற்சி அளிக்கப்படுகிறது.
    சென்னை:

    பொங்கல் தினமான 14-ந் தேதி எல்லா உயிர்களையும் காக்கும் சூரிய கதிர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் உலகளாவிய அளவில் சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சிக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

    தமிழகத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையங்கள் 176 இடங்களில் செயல்படுகிறது. இந்த மையங்கள் அனைத்திலும் சூரிய நமஸ்கார நிகழ்ச்சி நடைபெறும்.

    அதேபோல 18 இயற்கை மருத்துவ கல்லூரிகளிலும் சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த கல்லூரிகளில் சுமார் 9 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களில் விடுமுறையில் ஊருக்கு செல்லாமல் கல்லூரிகளில் இருப்பவர்கள் கலந்து கொள்வார்கள்.

    சூரிய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் பயன்கள் பற்றி அரசு இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியை டாக்டர் தீபா கூறியதாவது:-

    ஏற்கனவே தமிழகத்தில் அரசின் ஒத்துழைப்புடன் தினமும் இயற்கை மருத்துவ மையங்களிலும், கல்லூரிகளிலும் சூரிய நமஸ்கார பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்த பயிற்சியை செய்யும்போது உடலின் வெப்பநிலை அதிகரித்து செல்களின் இயக்கமும் அதிகரிக்கும். உடலில் இருக்கும் கழிவுகள் அகற்றப்பட்டு புத்துணர்ச்சி ஏற்படும்.

    சூரிய நமஸ்காரத்தில் 12 நிலைகள் உள்ளது. நாள் முழுவதும் நமது உடலின் இயக்கத்துக்கு தேவையான சக்திகள் இதன்மூலம் கிடைக்கும். சீரான ரத்த ஓட்டத்துக்கு தூண்டுகோலாக இருக்கும்.

    பயிற்சியின்போது முன்னாலும், பின்னாலும் குனிவதால் முதுகுத்தண்டு வடம் பலப்படும். முதுகுவலி வராது. பின்கலை நாடியை தூண்டி நினைவாற்றலை வளர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். உடல் பருமன் ஏற்படாமல் பாதுகாக்கும். இதன் மூலம் ரத்த அழுத்தம், கொழுப்பு படிதல் தடுக்கப்படும். ஏற்கனவே இருப்பவர்களுக்கு கட்டுக்குள் வைத்திருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×