search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்
    X
    கோவில்

    கோவில்களை பராமரித்து மேம்படுத்த 17 பேர் கொண்ட உயர்நிலை குழு

    ஆலோசனைக் குழுவானது அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு பயணப்படி மற்றும் தினப்படி வழங்கும் பொருட்டு முதல் நிலைக்குழுவாக கருதப்படும்.
    சென்னை:

    அனைத்து இந்து கோவில்களிலும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தவும், கோவில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும் ஆலோசனை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராக கொண்ட உயர்நிலை ஆலோசனை குழு அமைதிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 21-6-21 அன்று நடைபெற்ற 16-வது சட்டசபை முதல் கூட்டத்தொடரில் கவர்னர் உரையில், அனைத்து முக்கிய இந்து கோவில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், கோவில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், பிற ஆலோசனைகளை வழங்குவதற்கும், மாநில அளவிலான ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி 13 அலுவல் சாரா உறுப்பினர்களை உள்ளடக்கிய 17 பேரை கொண்ட ஆலோசனைக் குழுவை நியமனம் செய்தும் அரசு ஆணையிடுகிறது.

    1. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - தலைவர்

    2. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு- துணைத்தலைவர்.

    3. செயலாளர், அறநிலையங்கள் துறை - உறுப்பினர்.

    4. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் - உறுப்பினர், செயலர்.

    5. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

    6. ஸ்ரீமத் வராக மகாதேசிகன்.

    7. ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.

    8. திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்.

    9. நீதியரசர் டி.மதிவாணவன் (ஓய்வு).

    10. சுகி சிவம்.

    11. கருமுத்து தி.கண்ணன்.

    12. மு.பெ.சத்தியவேல் முருகனார்.

    13. ந.ராமசுப்பிரமணியன்.

    14. தரணிபதி ராஜ்குமார்.

    15. மல்லிகார்ஜீன் சந்தான கிருஷ்ணன்.

    16. ஸ்ரீமதி சிவசங்கர்.

    17. தேச மங்கையர்க்கரசி.

    ஆலோசனைக்குழுவின் அலுவல்சாரா உறுப்பினர்களின் பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

    ஆலோசனைக் குழுவானது அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு பயணப்படி மற்றும் தினப்படி வழங்கும் பொருட்டு முதல் நிலைக்குழுவாக கருதப்படும்.

    ஆலோசனைக் குழுவின் அலுவல்சாரா உறுப்பினர்களுக்கு பயணப்படி மற்றும் தினப்படி ஆகியவற்றை வழங்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×