search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு முன்பதிவு செய்யும் பயணிகள்
    X
    சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு முன்பதிவு செய்யும் பயணிகள்

    ஒரே நாளில் 74 பேருக்கு தொற்று - தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 120 ஆனது

    ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 66 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும், 52 பேர் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் பரவி புதிய கொரோனா அலைகளை உருவாக்கி வருகிறது. இந்தியாவிலும் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் அச்சுறுத்தி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவிலான நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

    தமிழகத்தில் நேற்று வரை 46 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 74 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 120 ஆக உயர்ந்துள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு

    ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 66 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும், 52 பேர் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

    தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பைப் பொருத்தவரை சென்னையில் அதிகபட்சமாக 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டில் 5, மதுரையில் 4, திருவள்ளூரில் 3 மற்றும் சேலம், திருவாரூர், கோவை, புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    Next Story
    ×