என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
  X
  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

  தாம்பரம் -ஆவடி போலீஸ் கமி‌ஷனர் அலுவலக தொடக்க விழா- மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாம்பரம் கமி‌ஷனர் அலுவலக சிறப்பு அதிகாரியாக ரவி, ஆவடி கமி‌ஷனர் அலுவலக சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
  சென்னை:

  சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தை பிரித்து தாம்பரம்- ஆவடிக்கு புதிய கமி‌ஷனர் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

  தாம்பரம் கமி‌ஷனர் அலுவலக சிறப்பு அதிகாரியாக ரவி, ஆவடி கமி‌ஷனர் அலுவலக சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

  இருவரும் தங்களது பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட அலுவலகங்களில் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்கள். இருப்பினும் புதிய கமி‌ஷனர் அலுவலகம் தொடர்பாக தொடக்கவிழா இதுவரை நடைபெறாமல் இருந்து வந்தது.

  இந்த நிலையில் புத்தாண்டில் புதிய கமி‌ஷனர் அலுவலக தொடக்க விழா முறைப்படி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  ஜனவரி 1-ந் தேதி தொடக்க விழா நடைபெற இருப்பதாகவும், அதில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

  இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.

  Next Story
  ×