என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ஆந்திர வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆம்பூர் அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ஆந்திராவை சேர்ந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.
  ஆம்பூர்:

  திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் ஆம்பூர் அடுத்த பைரபல்லியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இவரது 15 வயது மகளை அதே செங்கல் சூளையில் வேலை செய்து வந்த ஆந்திர மாநிலம் மிட்டப்பல்லியை சேர்ந்த லட்சுமணன் (வயது 22) என்பவர் காதலித்து வந்துள்ளார்.

  கடந்த ஓராண்டுக்கு முன் இருவீட்டாரின் சம்மதத்துடன் சிறுமியை லட்சுமணன் திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் அவர் தனது தாய் வீட்டுக்கு சென்றார். அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

  இதுகுறித்து திருப்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வழக்கை ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர். இது தொடர்பாக மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய லட்சுமணனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
  Next Story
  ×