என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மரணம்
  X
  மரணம்

  மதுரவாயலில் 2-வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரவாயலில் 2-வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  போரூர்:

  மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான குடோன் உள்ளது.

  இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாத் மக்தோ (53) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

  நேற்று இரவு 12மணி அளவில் வழக்கம் போல பணி முடிந்து ஊழியர்கள் அனைவரும் தங்களது அறைக்கு தூங்க சென்று விட்டனர். அதிகாலை 5மணி அளவில் லாரியில் வந்த பொருட்களை இறக்குவதற்காக தேடியபோது பிரசாத் மாயமாகி இருப்பது தெரியவந்தது. பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

  இந்த நிலையில் குடோன் கட்டிடத்தின் வலதுபுறத்தில் பிரசாத் தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

  தகவல் அறிந்ததும் மதுரவாயல் போலீசார் விரைந்து வந்து பிரசாத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் 2-வது மாடியில் உள்ள அறையில் இருந்து விழுந்து இருந்திருப்பது தெரியவந்தது.

  அறையில் தூங்கி கொண்டு இருந்த பிரசாத் எப்படி கீழே விழுந்தார் என்பது மர்மமாக உள்ளது. அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ஊழியர்களிடம் ஏற்பட்ட தகராறா? யாராவது பிரசாத்தை கீழே தள்ளிவிட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×