என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தூண்பாறை பகுதியில் தவழ்ந்து செல்லும் பனி மூட்டத்தை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
  X
  தூண்பாறை பகுதியில் தவழ்ந்து செல்லும் பனி மூட்டத்தை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

  கொடைக்கானலில் முன்பனிக்காலத்தில் சுற்றுலா பயணிகள் குதூகலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடைக்கானலில் முன்பனிக்காலம் தொடங்கி உள்ள நிலையில் கடும் பனிப்பொழிவிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவது உள்ளூர் மக்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
  கொடைக்கானல்:

  கொடைக்கானல் மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 2300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் இங்கு ஆண்டுதோறும் வருகை தருகின்றனர். இயற்கை எழில் கொண்ட மலைப்பகுதியாக கொடைக்கானல் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரிலிருந்து கிழக்கு நோக்கி நீண்டுள்ள இந்த மலைத்தொடரை, 3 பகுதிகளாக பழங்குடியினர் பிரித்து பெயர் வைத்துள்ளனர்.

  கேரளாவை ஒட்டியுள்ள மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகள், மேல்மலைப் பகுதிகள் என்றும், நகரம் அமைந்துள்ள கொடைக்கானல் பகுதியை நடுமலை என்றும், பெருமாள்மலைக்கு கீழ் உள்ள பகுதிகளை கீழ்மலை என்றும் இயற்கை அமைப்பை வகுத்து பிரித்துள்ளனர்.

  இந்த சூழல் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் எங்கும் இல்லாத சிறப்பம்சமாக உள்ளது. இயற்கையாகவே 3 பிரிவாக உள்ளதால் இந்த மலைப்பகுதிகளில் 3 விதமான காலநிலையும் உள்ளது. மேல்மலைப் பகுதிகள் எப்பொழுதுமே அதிக குளிராகவும், நடுமலைப் பகுதிகள் அனுபவிக்கத்தக்க குளிராகவும், கீழ்மலைப்பகுதிகளில் இருவிதமாக வெப்பம் கலந்த குளிராகவும் இருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கொடைக்கானல் மலைப்பகுதிகளிலிருந்து தென்மாவட்டங்களின் சமவெளிப்பகுதிகளை கோக்கர்ஸ் வாக் தலத்திலிருந்து, எளிதாக காணமுடியும்.

  தற்பொழுது மார்கழி மாதம் தொடங்கி உள்ள நிலையில், இந்த கோக்கர்ஸ் வாக் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சமவெளி மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் சில பகுதிகள், வருசநாடு மலைப்பகுதிகளை கொண்ட பகுதிகளை மூடு பனியானது முழுவதும் தாழ்ந்து மூடியுள்ள அறிய காட்சிகள் அதிகாலை நேரங்களில் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

  மேலும் மலைப்பகுதிகளில் மூடுபனி இல்லாமல் நீல வானத்துடன் கூடிய நேரடி சூரிய வெப்பம் வீசுவதும், அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் உறை பனி என அழைக்கப்படும். வறண்ட பனியும் நிலவத்துவங்கியுள்ளது. மழைக்காலம் முடிவடைந்து முன்பனிக்காலம் துவங்கும் அறிகுறி இது என்று மலை வாழ் பழங்குடியினர் கூறுகின்றனர்.

  இந்த முன்பனிக்கால காலகட்டத்தில் கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சூரியன் உதிக்கும் ரம்மியமான காட்சிகளை காண சூரிய உதய சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக சுற்றுலாத்துறைக்கும், நகராட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளது.

  தற்போது நிலவும் கடும் பனிப்பொழிவு மற்றும் மேக மூட்டத்தால் எதிரில் வரும் நபர்களை கூட அடையாளம் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி செல்கின்றனர். கடும் பனிப்பொழிவில் பூங்காக்களில் உள்ள மலர்கள் ரம்யமாக காட்சி அளிக்கிறது. அதிகாலை பனியை கிழித்து சூரியன் உதிக்கும் காட்சி ரம்யமாக உள்ளது. இது போன்ற அழகிய காட்சிகளை காணவும் எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாடவும் சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.


  Next Story
  ×