என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சோவில் வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
  பொள்ளாச்சி:

  பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அருகில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் பிளஸ்- 1 படித்து வருகிறார். இந்தநிலையில், மாணவிக்கும் வாணியம்பாடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அருண்குமார் (வயது19) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மாணவியை திருமணம் செய்துகொள்வதாக அருண்குமார் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று உள்ளார்.

  தங்களது மகளை காணாமல் தவித்த பெற்றோர் இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் செய்தனர்.

  போலீசார் நடத்திய விசாரணையில், அருண்குமார் மாணவியை வாணியம்பாடி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். மேலும், மாணவியும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
  Next Story
  ×