என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  மோகனூர் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோகனூர் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மோகனூர்:

  மோகனூர் அருகே உள்ள பூண்டிபாளையத்தை சேர்தவர் நல்லுசாமி (வயது 32). விவசாயி. இவருக்கு ஹரிணி (22) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

  இந்த நிலையில் நல்லுசாமி, மனைவியை அவரது பாட்டி வீட்டில் விட்டு விட்டு 2 நாட்கள் கழித்து வந்து அழைத்து செல்வதாக கூறி சென்றார். இதற்கிடையே நேற்று திடீரென அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி ஹரிணி மோகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

  அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நல்லுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து மோகனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×