என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முக ஸ்டாலினுடன் ரகுராம் ராஜன் சந்திப்பு
  X
  முக ஸ்டாலினுடன் ரகுராம் ராஜன் சந்திப்பு

  மு.க.ஸ்டாலினுடன் ரகுராம் ராஜன் சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தலைமைச் செயலகத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார ஆலோசனைக்குழுவில் ஒருவருமான ரகுராம் ராஜன் முதல்-அமைச்சரை சந்தித்து பேசினார்.
  சென்னை:

  சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ரகுராம் ராஜன் சந்தித்துப் பேசினார்.

  தமிழக பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற நடவடிக்கை எடுக்கும் வகையில், பொருளாதார நிபுணர்கள் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ், டாக்டர் எஸ்.நாராயண் ஆகியோரைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது.

  கொரோனா பாதிப்பால் தமிழக பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டவை குறித்து இதுவரை 2 முறை இந்த குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு இருந்தார்.

  இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார ஆலோசனைக்குழுவில் ஒருவருமான ரகுராம் ராஜன் முதல்-அமைச்சரை சந்தித்து பேசினார்.

  அவருடன் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×