search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்புமணி ராமதாஸ்
    X
    அன்புமணி ராமதாஸ்

    பாரதிதாசன் பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

    அழகான தமிழ் முழக்கத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ள நிலையில், இந்தி முழக்கத்தை பாரதிதாசன் பல்கலைக் கழகம் பயன்படுத்தியிருப்பது இந்தித் திணிப்பு தான் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    பா.ம.க. இளைஞர் அணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    திருச்சியில் நாளை நடைபெறவிருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழில் விடுதலை நாள் பவள விழாவைக் குறிக்க ’ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்ற இந்தி முழக்கம் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்!

    விடுதலை நாள் பவள விழாவுக்கான வாசகமாக ’ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை ’’சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா” என தமிழாக்கம் செய்துள்ள தமிழக அரசு, அதைத் தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதை பாரதிதாசன் பல்கலைக்கழகம் மீறியுள்ளது!

    பாரதிதாசன் பல்கலைக்கழகம்

    அழகான தமிழ் முழக்கத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ள நிலையில், இந்தி முழக்கத்தை பாரதிதாசன் பல்கலைக் கழகம் பயன்படுத்தியிருப்பது இந்தித் திணிப்பு தான். தமிழக அரசின் ஆணையை மதிக்காத பாரதிதாசன் பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது?

    அனைத்து தமிழக அரசு நிறுவனங்களும் மாநில அரசின் ஆணையை மதிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆணையை மதிக்காமல் இந்தி முழக்கத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதையும் படியுங்கள்...அமெரிக்காவில் மாவீரர் நெப்போலியனின் போர்வாள் ரூ. 21.11 கோடிக்கு ஏலம்

    Next Story
    ×