search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயுள் தண்டனை
    X
    ஆயுள் தண்டனை

    செங்கோட்டையில் முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

    செங்கோட்டையில் முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
    தென்காசி:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை காலாங்கரை பகுதியை சேர்ந்தவர் விஜி மோன் (வயது 41). முன்னாள் ராணுவ வீரர். இவரது தந்தை ஜார்ஜுவுக்கும் 

    அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன் என்பவருக்கும் 2014-ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் விஜி மோன் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி அறுந்து விட்டது.

    இதைத்தொடர்ந்து அவர் பரமசிவன் தனது சங்கிலியை பறிப்பதற்காக தகராறு செய்ததாக ஊரில் சிலரிடம் கூறியிருந்தார்.

    தனது தகப்பனாருக்கு திருட்டு பட்டம் கட்டியதாகக் கருதிய பரமசிவனின் மகன் பண்டாரம் (27) கடந்த 11-5-2015 அன்று அதே ஊரில் வைத்து விஜிமோனை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    இது குறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பண்டாரத்தை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தென்காசி மாவட்ட கூடுதல்
    அமர்வு நீதிமன்ற நீதிபதி அனுராதா குற்றவாளி பண்டாரத்திற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ.2 ஆயிரம் அபராதமும், அதை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சின்னதுரை பாண்டியன் ஆஜரானார்.
    Next Story
    ×