search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    5 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

    ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய பகுதிகளிலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
    ராமேசுவரம்:

    தமிழகத்தையொட்டி உள்ள வங்கக்கடல் பகுதியில் 5 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானிலை மையம் அறிவுறுத்தலின் பேரில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். மேலும் மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்காமல் நிறுத்தி வைத்து படகுகளை பத்திரமாக கடலில் நங்கூரம் இட்டு பாதுகாக்க அறிவுறுத்தினர்.

    இதனால் ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளை கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

    இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வுநிலை கரையை கடந்ததால் வலுவிழந்தது. இதையடுத்து ராமேசுவரம் பகுதியில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது.

    இதன் காரணமாக ராமேசுவரம், மண்டபம் பாம்பன் ஆகிய பகுதிகளிலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

    அதன் பேரில் இன்று காலை மீன்பிடி டோக்கன் வழங்கப்பட்டது. மீனவர்கள் மீன்பிடி சாதனங்களை சேகரித்துக் கொண்டு 1500 படகுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டுச் சென்றனர். 5 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்றதால் ராமேசுவரம் துறைமுகம் பரபரப்புடன் காணப்பட்டது.
    Next Story
    ×