
களக்காடு அருகே உள்ள நெடுவிளை நடுத்தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (45), தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன் ரவிச்சந்திரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையொட்டி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல்நலம் தேறவில்லை.
இதனால் மனவேதனை அடைந்தார். சம்பவத்தன்று வயலுக்கு சென்ற ரவிச்சந்திரன் விஷம் குடித்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு ஜெயக்குமாரி என்ற மனைவியும், 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.