search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
    X
    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    வருகிற 1-ந்தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமுமில்லை- அமைச்சர் பேட்டி

    வருகிற 1-ந் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. தீபாவளி விடுமுறை முடிந்த பிறகு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்துள்ள பெற்றோர்கள் அதன்படியே செய்யலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி பகுதி பழைய மாரியம்மன் கோவில் சாலையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தஞ்சை மாநகராட்சியில் கழிவுநீர் வாய்க்கால், பாதாள சாக்கடை திட்டம் நவீன முறையில் செயல்படுத்தப்படும். எதிர்காலத்தில் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய டெக்னாலஜி முறை பயன்படுத்தப்படும்.

    தேசிய போட்டியில் சிலம்பாட்ட போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. யுனிவர்சிட்டி அளவில் சிலம்ப போட்டியை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக ஒலிம்பிக்கில் அதனை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளபடும்.

    வருகிற 1-ந் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. தீபாவளி விடுமுறை முடிந்த பிறகு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்துள்ள பெற்றோர்கள் அதன்படியே செய்யலாம்.

    இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் பிரச்சினை சரி செய்ய வழி பிறக்கும். இந்த திட்டம் உன்னதமான திட்டம் ஆகும். மாலை நேர வகுப்பாக இந்த பயிற்சி நடைபெறும். இது குறித்து பயிற்சி கொடுக்க படித்த தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் அதற்கான இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நேற்று வரை 50 ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். ஓரிரு நாளில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதையும் படியுங்கள்... அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள்- ஓ.பன்னீர்செல்வம்

    Next Story
    ×