search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியாறு அணை
    X
    பெரியாறு அணை

    தொடரும் கனமழை- பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று காலை நிலவரப்படி 135.45 அடியாக உள்ளது.
    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைந்தது. இந்நிலையில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் மஞ்சளாறு அணை முழு கொள்ளளவான 55 அடியை எட்டியது. இதனையடுத்து அணைக்கு வரும் 294 கன அடி நீரில் 100 கன அடி மதகுகள் வழியாகவும், 194 கன அடி உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    இதே போல சோத்துப்பாறை அணையும் முழு கொள்ளளவை எட்டி 126.41 அடியில் உள்ளது. இதனால் அணைக்கு வரும் 80 கன அடி நீரில் 30 கன அடி மதகுகள் வழியாகவும், 50 கன அடி உபரியாகவும், திறக்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று காலை நிலவரப்படி 135.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3805 கன அடி தண்ணீர் வருவதால் இன்று மாலைக்குள் 136 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    142 அடி வரை தண்ணீர் தேக்குவதற்கு இன்னும் ஓரிரு நாளில் வாய்ப்பு உள்ளது என்றும் விவசாயிகள் நம்பிக்கையடைந்துள்ளனர். மேலும் அணையில் இருந்து வினாடிக்கு 1951 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5979 மி. கனஅடியாக உள்ளது.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.72 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2597 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் இன்று மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 57 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து 1119 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3049 மி. கனஅடியாக உள்ளது.

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    பெரியாறு 28, தேக்கடி 8, கூடலூர் 7.6, சண்முகாநதி அணை 27.5, உத்தமபாளையம் 39.3, வீரபாண்டி 55, வைகை அணை 1, மஞ்சளாறு 13, மருதாநதி 40.4, சோத்துப்பாறை 8, கொடைக்கானல் 27 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
    Next Story
    ×