search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    நாகர்கோவில்-தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்

    கொரோனா தொற்று காரணமாக மாநில அரசின் வழிகாட்டுதல்படி பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    மதுரை:

    மதுரை கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் ‘தண்ணீர்’ ரமேஷ்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா தொற்று காரணமாக பயணிகள் ரெயில்கள் இயக்கம் முழுமையாக இல்லை. இருந்தபோதிலும் ஊழியர் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு மத்திய அரசு 78 நாள் சம்பளத்தை போனஸாக அறிவித்துள்ளது.

    மதுரை கோட்டத்தில் கெஜட்டட் அதிகாரிகள், ரெயில்வே போலீசார் தவிர மீதமுள்ள 7855 ரெயில்வே ஊழியர்களுக்கும், அதிகபட்சமாக ரூ.17,951 வரை போனஸ் வழங்கப்படும்.

    மதுரை கோட்டத்தில் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒட்டுமொத்தமாக ரூ.13.35 கோடி செலவிடப்பட உள்ளது.

    கொரோனா தொற்று காரணமாக மாநில அரசின் வழிகாட்டுதல்படி பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து வருகிற 13 மற்றும் நவம்பர் 3 ஆகிய தேதிகளில் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மதுரை வழியாக அடுத்த நாள் காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து வருகிற 17 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.

    செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை நிலையங்களில் ரெயில் நின்று செல்லும்.

    இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×