என் மலர்

  செய்திகள்

  திருமாவளவன்
  X
  திருமாவளவன்

  விடுதலை சிறுத்தைகள் புதிய நிர்வாகிகள் நியமனம்- திருமாவளவன் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய சென்னை மேற்கு அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஷீபா கிறிஸ்தவ சமூகநீதி பேரவையின் மாநில துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  சென்னை:

  விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. கன்னியாகுமரி மற்றும் சென்னை மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

  கன்னியாகுமரி, விளவங்கோடு வட்டம் அருமனையைச் சேர்ந்த திலிப்சிங் வழக்கறிஞர் அணியின் மாநில துணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

  அதே போல கன்னியா குமரி விளைவங்கோடு வட்டம் அருமனையைச் சேர்ந்த ஸ்டீபன் சமூக நல்லிணக்க பேரவையின் தென்மண்டல அமைப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

  கன்னியாகுமரியைச் சேர்ந்த அருள் கிறிஸ்டோபர் கிறிஸ்தவ சமூக நீதி பேரவையின் கன்னியாகுமரியின் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

  கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்தைச் சேர்ந்த பத்மராஜா சமூக நல்லிணக்க பேரவையின் கன்னியாகுமரி ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

  மத்திய சென்னை மேற்கு அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஷீபா கிறிஸ்தவ சமூகநீதி பேரவையின் மாநில துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  இவர்கள் இன்று முதல் 3 ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில் நீடிப்பார்கள். கட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு களப்பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×