என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  காதலி பேச மறுத்ததால் விபரீத முடிவு - ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பூந்தமல்லி அருகே காதலி பேச மறுத்ததால் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  பூந்தமல்லி:

  குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், சரோஜினி தெருவைச் சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (வயது 24). லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தபோது, ஆனஸ்ட்ராஜ் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஆனஸ்ட்ராஜை மீட்டு, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீசார் இறந்துபோன ஆனஸ்ட்ராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆனஸ்ட்ராஜ் திருநீர்மலையை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், அந்த பெண் சில நாட்களாக அவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

  இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஆனஸ்ட்ராஜ் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும், மேலும் அவர் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்திலும் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×